Saturday, August 22, 2009

உன் கடந்த காலத்தை விட்டு விட

உன் கடந்த காலத்தை விட்டு விட
(யோவான் 5)



வெளிளீடு 2004 , Bruce N. Cameron JD
http://www.GoBible.org


முன்னுரை - தங்களுக்காக ஜெபித்துக் கொள்ளுமாறு பலர் என்னிடம் கேட்டுக கொள்வார்கள். அப்படி ஜெபித்ததில் பலர் குணமடைந்துள்ளனர். ஆனால் சிலருக்கு சுகம் கிடைக்கவில்லை. ஒருவர் சுகம் பெறுவதற்கு தேவன் தெரிந்து கொள்கிறாரா என்ற கேள்வி எழுகிறது. யோவான் 5ம் அதிகாரம், தேவ வல்லமையை விளக்கும் இக்கேள்விக்குரிய விளக்கத்தைத் தருகிறது

1. எதிர்பாராத சந்தோஷங்கள்

A. இயேசு எருசலேமுக்கு மறுபடியும் வருகீறார். ஏன் திரும்புகிறார்? (அது ஒரு சமய விழா. அது இன்னதென்று நாம் அறியோம்).


B. யோவான் 5.2ஐ வாசிக்கவும். இதில் காணப்படும் குளம் என்பதானது என்ன? நிச்சயமாக இது ஓர் எழில் நிறைந்த இடமாகும்.


C யோவான் 5.3ஐ வாசிக்கவும் - நிதரிசணத்தில் இது அழகு நிறைந்ததா? உங்கள் நேரத்தை இங்கே வீணடிக்க விரும்புவீர்களா? (உல்லாசமாக நேரத்தை செலவழிக்க வேண்டும் என்றால் கூட இவ்விடத்தை விலக்கி விடுவீர்கள். ஏனென்றால், துன்பத்தில் மூழ்கீயவர்களே இங்கே நிறைந்ததிருக்கிறார்கள். ஒரு மருத்துவமனையை சுற்றி நீங்கள் நேரத்தை உல்லாசமாகக் கழிப்பீர்களா?


D. பல வேத மொழி பெயர்ப்புகள் 3வது 4வது வசனங்களின் பிற்பகுதியை நீக்கி விட்டன. ஏனென்றால் அது அறுவறுக்கத் தகுந்த விமர்சனமாகும். ஆனால், இந்த விமர்சனம் இல்லாமல், யோவான் 5.7ஐ எப்படி விளக்கப் போகிறீர்கள்?

1. அவ்வப்போது இந்தத் தணிக்கை எனக்கு ஏமாற்றத்தை உண்டு பண்ணுகிறது. இந்தத் தணிக்கை தேவ தன்மைக்கு ஏற்றதாக இருக்கிறதா? - முந்திக் கொள்கிறவர்களை மட்டுமா தேவன் சுகப்படுத்துவார்?


யோவான் 5.5-7ஐ வாசிக்கவும். உங்களை அந்த இடத்தில் வைத்துப் பார்க்கவும்

1. எதிர்காலத்தில் நீங்கள் சுகம் பெறுவீர்கள் என்று என்ன நம்பிக்கை இருக்கிறது? உங்களால் முந்தியடித்துக் கொண்டு நீர் கலக்கப்படும்போது குளத்தில் இறங்க முடியும் என்றால், நீங்கள் எப்போதோ சுகம் பெற்றிருப்பீர்கள். ஆனால், உங்களுக்கு அந்த வாய்ப்பே இல்லாமல் போய் விட்டதே.

2. உங்களுக்கு எப்படிப் பட்ட நம்பிக்கை உண்டாயிருக்கும் (சொற்பமும் கிடையாது)

3. உங்களுக்கு எப்படிப்பட்ட மனோபாவம் உண்டாயிருக்கும்?
நீங்கள் நோய் வாய்ப் பட்டிருக்கும்போது, பிற நோயாளிகளோடு உரையாடுவது எளிதானதா?

F. 6ம் வசனத்தில் இடம் பெற்றுள்ள இயேசுவின் வார்த்தையைக் கவனியுங்கள். அடிப்படையில் அக்கேள்வி அர்த்தமற்றது. இயேசு அர்த்தமற்ற கேள்விகளைக் கேட்க மாட்டார். மூடத்தனமாக கேள்விகளும் வேதத்தில் இடம் பெறுவதில்லை. நீங்கள் இந்தக் கேள்விக்கு என்ன பதில் கூறுவீர்கள்?

1. 7ம் வசனத்தில் இடம் பெற்றிருப்பதைதான் இயேசு பதிலாக எதிர்பார்த்தாரா? (இல்லை. இயேசு அவனுடைய விசுவாசத்தைதான் எதிர்பார்த்தார். ஆனால், அவனோ, தனக்கு உண்டாகக்கூடாத வாய்ப்பைதான் தவறாக எண்ணியிருந்தான்).


G. யோவான் 5.8-9ஐ வாசிக்கவும். இது இன்றளவும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய நமது ஐயப்பாடுகளுக்கு உட்பட்டது.

1. தேவனின் செயலை நாம் இங்குக் காண்கிறோம். சுகமடையக் கூடாத மோசமான அங்கவீனனையா இயேசு தேர்ந்தெடுத்தார்? ஆமாம். முற்றிலும் நம்பிக்கை இழந்த மனிதனைதான் அவர் தேர்ந்தெடுத்தார்.

2. இயேசு அவனிடம் என்ன வேண்டும் என்று கேட்கும்போது, மனித பார்வையில் சாத்தியமாக நடக்கக் கூடியதையே அவன் கூறினான். உண்மையில் தேவ ஆற்றலில் சாத்தியமானது நமது கற்பனைக்கும் எட்டாதது ஆகும்.
நீங்களும் அந்த முடவனைப் போல் செயல்படுகிறீர்களா? கற்பனைக்கும் எட்டாத காரியத்தை தேவன் வழங்க சித்தம் கொண்டிருக்கும்போது, குறுகிய உங்கள் பார்வைக்கு சாத்தியமானதை மட்டும அவரிடம் கேட்கிறீர்களா?

3. சுகம் பெறுவதற்கு விசுவாசம் தேவையானதன்றோ? (மத்தேயு 9.22ல், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்று அப்பெண்ணின் கூறியிருக்கிறாரே) அந்தப் பெண்ணிடம் என்ன விசுவாசம் இருந்தது என்று நாம் அறிவோமா?

II. ஓய்வுநாள் கட்டுபபாட்டை மீறுதல்?

யோவான் 5.9-10யும் 16-18யும் வாசிக்கவும். அவன் 38 வருடமாக சுகவீனப்பட்டிருந்தான். ஓய்வு நாளில் ஒருவனுக்கு சுகம் கொடுக்கக் கூடாதா? இயேசு ஏன் ஓய்வு நாளைத் தேர்ந்தெடுத்தார்? உன் படுக்கையை எடுத்துக் கொண்டு நட என்று ஏன் இயேசு ஓய்வு நாளில் கட்டளையிட வேண்டும்? ஓய்வு நாளைக் குறித்து இயேசு ஒரு செய்தியைச் சொல்ல வருகீறார்.

1. அச்செய்தி என்ன? யோவான் 5.17ல் இயேசு என்ன சொல்ல வருகிறார்? ஓய்வு நாளைக் குறித்து யூதத் தலைவர்களுக்கு உண்மையான ஞானம் கிடையாது. ஓய்வு நாளில் நற்கிரியை செய்வது ஆன்மீகத்திற்கு உகந்தது. தமது பிதாவும் தாமும் ஓய்வு நாளில் கூட கிரியை செய்து வருவதாகக் கூறுகிறார். உண்மையில் இது ஒரு தெய்வ செயல். அந்த முடவன் சொஸ்தமானதைக் குறிக்கும் செயல் அல்ல.

a. ஆதியாகமம் 2.2-3யும் யோவான் 5.17யும் ஒப்பிட்டுப பார்க்கவும். பிதாவாகிய தேவன் ஓய்வுநாளைப் பரிசுததமாக ஆசரிக்கவில்லையா? அல்லது ஆரம்பத்தில் அதனைப் பரிசுத்தப்படுத்திவிட்டு, பின்னர் விட்டு விட்டாரா? அன்றைய தினமும் அவர் நமக்கு வாழ்வளிக்கிறார். கிரகங்களை தத்தம் கோளங்களில் நிறுத்தியிருக்கிறார். அண்டசராசத்தை நிலைப்படுத்துகீறார். ஏழு நாட்களும் நம்மைப் பராமரிக்கிறார்.

B. அத்தனை வியாதியஸ்தர்களில் ஏன் இயேசு ஒருவனை மட்டும் சுகப்படுத்துகிறார்? ஓய்வு நாளிலும் நற்கிரியை செய்வதற்கு அவர் கடமைபட்டவராயிருந்தும் ஏன் மற்றவர்களை விட்டு விட்டார்?

1. இது உண்மையென்றால், தேவனைப் பற்றி இது போதிப்பது என்ன? நம்மைப் பற்றியும் போதிப்பது என்ன? (தேவன் ஆக்கப்பூர்வமானவர். அவருக்கென்று ஒரு பெரிய தரிசனம் உண்டு. அந்தத் தரிசணத்தின் அடிப்படையில்தான் அவர் செயல்படுகிறார். ஒரு வேளை, உங்கள் குற்றங்களில் இருந்து உங்களை விடுவிப்பதற்காக இருக்கக் கூடும். நீங்கள் நம்பிக் கொண்டிருக்கிற தவறான காரியத்தில் இருந்து உங்களைத் திருத்துவதற்காகவும் இருக்கக் கூடும். நோயாளியை சொஸ்தமாக்குவதுதான் முக்கியமானது என்று நீங்கள் நம்பக்கூடும். இது உண்மையல்ல. தேவனின் செய்தியும் நோக்கமும் முக்கியம் வாய்ந்தவை. அவற்றை விளக்குவதற்குதான் வேதம் அருளப்பட்டுள்ளது. நம்மைப் பற்றி அல்ல.


III. பாவத்தை விட்டு விடு

A. யோவன் 5.11-14ஐ வாசிக்கவும். இந்த அடையாளம் அந்த முடவன் சொஸ்மாவதற்கு ஆதாரமாய் இருந்ததா? (கிரியைகள்)

1. பாவஞ் செய்யாதே என்று இயேசு அவனிடத்தில் கூறினார். நாம் அனைவரும் பாவியாய் இருக்கிறோம். இயேசுவின் செய்தியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
அ) அவன் சில கட்டுப்பாடுகளை (கற்பனைகளை) மீறியிருக்கிறான் என்று சொல்வீர்களானால், யோவான் 9.1-3லும் லூக்கா 13.1-5லும் இயேசு கூறியதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? (சில சமயங்களில் பாவத்திநிமித்மும் வேறு சில சமயங்களில் அப்படியில்லாமலும நாம் நோய்வாய்ப பட்டிருக்கிறோம் என்று நாம் நினைக்கிறோம்). ஒருவனி பாவங்கள் மன்னிக்கப்படாத பட்சத்தில் அவன் சொஸ்தமாகமாட்டான் என்று யூதர்கள் நம்பினார்கள். ஆனால், பாவ மன்னிப்பு பெற்றதினால் இந்த முடவன் சொந்தமாகவில்லை என்பதை அறிய விரும்புகிறார். மன்னிக்கப்படாத அவனின் பாவங்களை அவன் கடுமையாக சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.




IV. முற்றிலும் தெய்வமானவர்

A. யோவான் 5.16-18ஐ மீண்டும் வாசிக்கவும். இயேசுவை அறியாதவர்கள், அவர் மிகவும் நல்லவர் என்றும், தேவ தூதரைப் போன்றவர் என்று நம்பி வந்தார்கள். இயேசுவைச் சந்தித்தவர்கள் அவர் உண்மையில் யான் என்று அறிந்திருந்தார்களா? அல்லது அவர் தேவனுக்கு ஒப்பானவர் என்று அற்பமாக எண்ணினார்களா?

1. இயேசு முழு தேவனும் இல்லை, முழு மனிதனும் இல்லை என்றால், உண்மையில் அவர் யார்? இக்கேள்விக்குத் தெளிவான இடைவெளியைக் கொண்ட இருப்புப் பாதையைப் போன்ற விளக்கம் உள்ளது. இயேசு தேவன் என்று நம்பாததின் நிமித்தம், அவர் போதனையில் அக்கறை செலுத்தவில்லை என்றால், அவர் பொய்யர் என்றும் பைத்தியக்காரர் என்றும் நம்ப வேண்டும். மதியீனனே இந்த இரண்டு பாதைக்கு நடுவில் நிற்க முடியும்.

B. யோவான் 5.21-25ஐ வாசிக்கவும். இயேசுவிக்கு செவி சாய்த்து, பிதாவாகிய தேவன் அவருக்கு நித்திய ஜீவன் வழங்கிருக்கிறார் என்று விசுவாசிப்பவர்களுக்கு என்ன வாக்குத்தத்தை அருளப்பட்டுள்ளது?

C. சகோதரர்களே, இதைத்தான் நாம் வாரா வாரம் கற்கப் போகிறோம். வேதத்தை வாசிப்பதன் மூலம் இயேசுவின் வார்த்தை கேட்பதோடு மாத்திரம் நின்ற விடுகிறோம். நித்திய வாழ்வைப் பெறுவதற்கு நாம் எடுக்க வேண்டிய அடுத்த அடி, விசுவாசம் ஆகும். இந்த விசுவாசத்திற்குள் வந்து, அழிவில் இருந்து விலகி நித்திய வாழ்வுக்குள் வருவீர்களா?



தொடரும் தலைப்பு
பரிசுத்தமானதும் எதார்த்தமானதும்

No comments:

Post a Comment