Friday, January 15, 2010

1.1 தகுதியான லே பாஸ்டர்களுக்கான அத்தியட்சாதீன இறையியல் கல்வி

1. பரிசுத்த வேதாகம்ம் பழைய ஏற்பாடாகவும் புதிய ஏற்பாடாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. பழைய ஏறப்ட்டில் 39 புத்தகங்கள் உள்ளன. புதிய ஏற்பாட்டில் 27 புத்தகங்கள் உள்ளன. வேதாகம்ம் ஒரு நூலகத்திற்கு ஒப்பானது. இயேசு கிறிஸ்துவின் பிறப்புக்கு முன்பு பழைய ஏற்பாடு எழுதப்பட்டது. கிறிஸ்துவின் பிறப்புக்குப் பின் புதிய ஏற்பாடு எழுதப்பட்டது.

2. பழைய ஏற்பாட்டில் சட்ட நூல்கள், வரலாற்று நூல்கள், சங்கீதமும் ஞானப்பாட்டும் கொண்ட நூல்கள், தீர்க்கதரிசன நூல்கள் அடங்கியுள்ளன. அது உலக இலக்கியங்களில் தலை சிறந்த ஒன்று. பழைமை வாய்ந்த மேலும் சில நூல்கள் இருக்க்க் கூடும். ஆனால், வாசிப்பவர் எண்ணிக்கை வழைய ஏற்பாட்டை மிஞ்ச முடியாது.

3. ஒரு புத்தகம் என்ற அர்த்த்த்தையும் கடந்து நிற்கிறது வேதாகம்ம். அது 66 புத்தகங்களைக் கொண்டுள்ள ஒரு முழு நூலகம். ஆபிரகாம், மோசே, யோசுவா, தாவீது போன்றோரின் புராணக் கதைகளில் இருந்து யோபு, பிரசங்கி போன்ற த்த்துவப்பாடல்களும் அனைவரின் தேவையைப் பூர்த்தி செய்யும் புத்தகங்கள் இதில் அடங்கியுள்ளன.

4. பழைய ஏற்பாட்டை எழுதியவர்கள், தங்கள் சமுதாயம் சமூக, பொருளாதார, அரசியல் அழுத்த்த்த்த்தின் மத்தியில் மட்டும் தோன்றாமல், தேவன் மற்றும் அவருடைய நடவடிக்கை மூலம் தோன்றியதாக உறுதியடு நம்புகின்றனர். இது ஒரு சமய நூலும் கூட. இந்த உலகமும் அதன் செயலாக்கமும் தற்செயலாக நடைபெறவில்லை என்று கூறுகிறது. அவை உச்சுமட்ட தேவக் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. தொலை தூறத்திலும் அறியப்படாத்துமான தேவ சக்தி அல்ல. ஆணும் பெண்ணும் தங்கள் சொந்த்த்திற்கு உறவாடக் கூடிய சக்தி அது. இச்செய்தியை ஆதியாகமத்தில் முதல் சில பக்கங்களில் காணலாம். அதனைத் தொடர்ந்து வரும் புத்தகங்கள் இச்செய்தியை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றன.

5. தேவன் தமது ஜனங்களோடு கொண்டுள்ள உறவே கதையாகப் பிணையப்பட்டுள்ளது. தொலைநோக்கோடும், உணர்ச்சிப்பூர்வமாகவும் ஓசியா தீர்க்கதரிசி தேவனை அன்பான தந்தை என்றும், இஸ்ரவேலர்கள் அவருடைய குமார்ர்கள் என்றும் வர்ணித்துள்ளார் (ஓசியா 11.1-4).

6. பழைய ஏற்பாடு, யுத்தங்களும் சவால்களும் நிறைந்த உத்தீபனமும் நிறைந்த புத்தகமாகும். தேவனுக்கும் ஜனங்களுக்கும் உள்ள உறவைக் கருவாக்க் கொண்டு எழுதப்பட்டுள்ளது.

7. இதிகாசத்தைப் புரிந்து கொள்ளுதல்:

a) பழைய ஏற்பாடு யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் பொதுவான வேதாகம்ம். அதில், அவருடைய ஜனங்களின் வளர்ச்சியையும் இஸ்ரவேலர்களுக்குத் தேவன் வழங்கிய வாக்குத் த்த்தங்கள் அனைத்தையும் காண்கிறோம். இந்த்த் தீர்க்கதரிசனங்கள் நிறைவேறுவதைப் புரிந்து கொள்வதில் உள்ள வேற்றுமையே நம்மைப் பிரிவுபடுத்துகிறது.

b) நம்மில் பலர் பழைய ஏற்பாட்டைக் கிறிஸ்தவ வேதகமத்தின் முதல் பகுதி என்று நன்கு உணர்ந்திருக்கிறோம். கிறிஸ்தவப் பார்வையில் பழைய ஏற்பாட்டையும் புதிய ஏற்பாட்டையும் பிரித்துக் காண முடியாது.

8. பல யுக காலக்கட்டத்தை பழைய ஏற்பாடு அடக்கியுள்ளது. புதிய ஏற்பாடோ 60-70 ஆண்டு காலக்கட்டத்தையே அடக்கியுள்ளது.

9. பல நாகரிகங்கள் பழமையான பிறகுதான் இஸ்ரவேல் ஜனங்கள் தோன்றினார்கள். யுப்பரோட்டஸ் நதிக் கரையோறம் தோன்றிய பாபிலோனியக் கலாச்சாரமும் கல்வியறிவும் குறிப்பிடும் வகையில் பழைய ஏற்பாட்டோடு தொடர்பைக் கொண்டிருக்கிறது.

10. யூதர்களும் கிறிஸ்தவர்களும் மனித குலத்திற்குத் தேவன் தம்மை எப்படி வெளிப்படுத்தினார் என்பதை விளக்கும் கருவியாக இப்புத்தகத்தைக் காண்கிறார்கள். இந்தச் செய்தி உலக மாந்தர்கள் அனைவருக்கும் உரியது. (யோவான் 3.16)

11. ஆயினும் பழைய ஏற்பாட்டுக் காலம் பல வகைகளில் தற்காலத்திற்கு அப்பாற்பட்டு இருக்கிறது. எனவே, இந்த வேறுபாடுகளை நாம் அறிந்திருக்க வேண்டும். இருந்த போதிலும் நாம் அனைவரும் பொதுவான மனித தன்மையையே பகிர்ந்து கொள்கிறோம்.

12. புராணமும் விசுவாசமும். பழைய ஏற்பாட்டுப் புத்தக்க் களஞ்சியத்தை ஆராய்வோம்:

ஆகமங்கள்: ஆதியாகம்ம், யாத்திராகம்ம், லேவியராகம்ம், எண்ணகம்ம் உபாகம்ம் ஆகிய புத்தகங்களைக் கொண்டுள்ளன.

இதிகாசம்: யோசுவா, நியாயாதிபதிகள், ரூத், சாமுவேல் 1ம், 2ம் புத்தகங்கள், ராஜாக்கள் 1ம், 2ம் புத்தகங்கள், நாளாகம்ம் 1ம், 2ம் புத்தகங்கள், எஸ்ரா, நெகேமியா மற்றும் எஸ்தர்.

கௌடம் (சங்கீதம்) மற்றம் ஞானப்பாட்டு: யோபு, சங்கீதங்கள், நீதிமொழிகள், பிரசங்கி, உன்னதப்பாட்டு.

தீர்க்கதரிசனங்கள்: ஏசாயா, எரேமியா, புலம்பல், எசேக்கியேல், தானியேல், ஓசியா, யோவேல், ஒபாதியா, யோனா, மீகா, நாகூம், ஆபகூக், செப்பனியா, ஆகாய், சகரியா மற்றும் மல்கியா.

13. இதிகாசத்திற்கும் மேலான விஷயங்கள் பழைய ஏற்பாட்டில் உண்டு. கற்பனையின் மிகுதியால் தங்கள் பேரானந்த்த்தையும் ஆராதனைப் பாடல்களையும் (உம்- சங்கீதம்) பேரழகை வர்ணிக்கும் கவிதைகளும் நிறைந்துள்ளன.





மேற்கோள் நூல்கள்:

David F Winson, OT Introduction (TEF Study Guide 7) (SPCK) 1973.

John Drane, Introducing the Old Testament (Lion Book) 1987.

J Alberto Soggin, Introduction to the Old Testament (SCM, 1980).



பழைய ஏற்பாட்டின் முதல் பாடமாக விசுவாசத்தின் தந்தையாகிய ஆபிரகாமைப் பற்றிக் காணப் போகிறோம்.